உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இன்று மழைப்பொழிவு இல்லாத நிலையிலும், அருவியில் வண்டல் மண் கலந்து தண்ணீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி