திருப்பூர்: அருவியில் குளிக்க தடை- வீடியோ

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளான குறுமலை குறிப்பிட்டு ஜல்லிமுத்தாறு பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் தற்சமயம் அருவிப்பகுதியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் தரப்பில் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி உள்ளது எனவும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஞ்சலிங்க அருவிக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் தடையால் ஏமாற்றத்துடன் சாமி தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்

தொடர்புடைய செய்தி