திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை மற்றும் மேல் மலை பகுதியில் மழைப்பொழிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருக்கோயில் பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.