திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தளி ரோடு வழியாக மூணாறு மறையூர் அமராவதி அணை திருமூர்த்தி அணை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தளி ரோட்டில் இரு வழி பாதையாக உள்ள நிலையில் சாலை ஓரம் பல மணி நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன போக்குவரத்து அதிகாரிகள் ரோந்து பணியில் இடுபட்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.