உடுமலை: விவசாயிகள் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை விவசாயிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வருகின்ற 11, 12 ஆம் தேதிகளில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, செயல் விளக்கங்களும் இடம்பெறும். மேலும் செடிகள் விற்பனை செய்யப்படும். கருத்தரங்கங்களில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெறும். மாநில திட்டங்களைப் பெறுவதற்கான முன்பதிவும் நடைபெறும். மேற்கண்ட கருத்தரங்கில் கலந்து கொள்ள உடுமலையிலிருந்து விவசாயிகளை அழைத்துச் செல்ல தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி