உடுமலை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான காலி இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் உச்சமாகாளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோவில் விழாக்களின் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, ஒரு தனிநபர் கம்பி வேலி அமைத்து இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு நிலத்தை முழுமையாக மீட்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி