உடுமலை அரசு இசைப்பள்ளியில் கலை இயல் அறிஞர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு இசைப்பள்ளியில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் அறிஞர் ஜாகீர் ஹுசைன் மாணவர்களிடையே உரையாற்றினார். இசைக் கல்வியின் பயன்கள், கற்கும் முறைகள், எதிர்காலப் பயன்பாடுகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், பல மாணவர்கள் இசைக் கலைஞர்களாக உருவாக வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சரவணமாணிக்கம் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி