திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.