இந்த நிலையில் மறுஏலம் நாளை 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணியளவில் நடைபெற உள்ளது. கடந்த வருடம் ரூ. 99 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. அதனுடன் 10 சதவீத கூடுதல் தொகையை சேர்த்து ஏலத்தொகை ரூ 1 கோடியே 9 லட்சத்து 12 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏலத்தொகையை குறைக்காமல் ஏலத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர்கள் ஏலம் எடுப்பார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஒருவேளை அதே தொகைக்கு ஏலம் எடுத்தால் பொழுதுபோக்கு கட்டணங்கள் விலை அதிகரித்து பொதுமக்கள் தலையில் சுமை ஏறக்கூடும். இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். எனவே அதிகாரிகள் பரிசீலனை செய்து ஏலத்தொகையை குறைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு