திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் கடந்த சில தினங்களாகவே படையப்பா என்ற ஒற்றை அணை இரவு மற்றும் பகல் நேரங்களில் நடமாடி வருகின்றது. இந்த நிலையில் கேரளா எல்லை பகுதியில் மறையூர் பகுதியில் படையப்பா யானை வழக்கம் போல் உடுமலையிலிருந்து மூணாறு சென்ற லாரியை வழிமறித்து தான் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து யானை வனப் பகுதிக்குள் சென்றதால் லாரியில் பயணம் செய்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.