எடப்பாடி பழனிச்சாமி வருகை: திருப்பூர் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை

திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை வழங்க திருப்பூர் மாநகர், புறநகர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு அதிமுக கழக தலைமை நிலையச்செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தாமோதரன், சி.மகேந்திரன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார் மற்றும் ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி