உடுமலை அருகே அதிமுக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதி குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் கொங்கல் நகரம் ஊராட்சி வழியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று மாலை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழாவிற்கு வந்த போது முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டுதல் படி கொங்கல் நகரம் ஊராட்சி நால்வரோடு பகுதியில் திருப்பூர் புறநகர் மேற்கு இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் விருகல்பட்டி என். பிரகாஷ் தலைமையிலும், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜ் முன்னிலையிலும் பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் உதயகுமார், மாணவர் அணி மாவட்ட செயலாளர் பரணிகுமார், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் ராமநாதன், வாகத்தொழுவு செந்தில், முத்துச்சாமி, அடிவெள்ளி செந்தில், மகாராஜன், முருகன், ரமேஷ், ராதாகிருஷ்ணன், தண்டபாணிசந்திரசேகர், மயில்சாமி, பத்மநாபன், சசிகுமார், சரவணகுமார், ராமகிருஷ்ணன், மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி