திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து உடுமலை நோக்கி வந்த போது அய்யம்பாளையம் பிரிவு பகுதியில் பயணிகளை இறக்கி விடுவதற்காக டிரைவர் பேருந்தை நிறுத்தினார். அப்போது பின்னால் கேஸ் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பஸ் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சமையல் எரிவாயுக்கள் காலியாக இருந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.