திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட உத்தரப்பா நகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நகரப்புற ஆரம்ப துணை சுகாதார நிலையம், தற்போது சுற்றுச்சூழல் இல்லாததால் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.