திருப்பூர்: இடிதாக்கி தீப்பிடித்து எரியும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் எஸ் அம்மாபட்டி கிராமத்தில் காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மாலை நேரத்தில் எஸ் அம்மாபட்டி என்ற கிராமத்தில் தென்னை மரத்தின் மீது இடி தாக்கியதால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தொலைபேசியில் வீடியோ எடுத்த நிலையில் இந்த வீடியோ தற்போழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி