திருப்பூர், உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தமாக 864 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டுக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 2-ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றன. இப்போது வரை இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதல் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வில் 702 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்த கலந்தாய்வு 13ஆம் தேதி நடக்க உள்ளது.