உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் 300 பேர் பயணம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பொதுக்கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ளது. இதில் சிறப்புரை ஆற்றவுள்ள அவரை வரவேற்க, உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக மண்டல தலைவர் துர்கா ஈஸ்வரசாமி ஏற்பாட்டில் பள்ளபாளையத்தில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்துள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி