திருப்பூர் 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (27), உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மனமுடைந்து விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.