திருப்பூர்: சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது செரீப் காஜி (35), உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவத்தன்று ராக்கியாபாளையம் பிரிவு அருகே காங்கயம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி