இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சூரிய பிரகாஷ் வழிகாட்டுதலின்படி மாநில துணைத்தலைவியாக தீபிகா பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் மாநகர மாவட்ட பொதுச் செயலாளராக சோஜன் மேத்யூ மற்றும் பாலாஜி, தெற்கு சட்டமன்ற தொகுதியின் துணைத் தலைவராக முஹம்மது கிராம், வடக்கு சட்டமன்ற தொகுதி துணைத் தலைவராக பிரின்ஸ் விஜய் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுடன் முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அருண் பிரகாஷ், 6-வது வார்டு தலைவர் கிருஷ்ணதாஸ், இலக்கிய அணி மாவட்ட தலைவர் துரை விஜயகுமார், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சுலைமான், திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.