திருப்பூர்: ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை

நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் (வயது 33) தனது பெற்றோருடன் திருப்பூர் வெங்கடாஜலபதி நகரில் குடியிருந்து வந்தார். விவாகரத்தான பெண் ஒருவரை மணிகண்டன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவர் தனது காதலை தெரிவித்தபோது அந்த பெண் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி