வீரபாண்டி: வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய வாலிபர் கைது

வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவ தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் போலீசார் ரோந்து மேற்கொண்ட போது கல்லாங் காடு செல்லும் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரிடம் விசாரணை நடத்தி னர். இதில் அவர் வீரபாண்டி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 28) என்பதும், அவர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 20 மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி