திருப்பூர் குமார் நகர் அருகே முருங்கப்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(வயது 48). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் மேம்பா லத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுரேஷ்பாபுவிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். சுரேஷ்பாபு கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து திருப்பூர் தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை யில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த விவேக்குமார் (30) என்பது தெரியவந்தது. இதுகு றித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் விவேக்குமார் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.