ஈரோடு மாவட்டம் கோபி குமாரபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (28) தனது மனைவி துர்காதேவி (22)யுடன் நேற்று ஈரோட்டில் இருந்து திருப் பூர் மத்திய பஸ் நிலையம் அருகே துணி எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். நெசவாளர் காலனி, நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். துர்காதேவி லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.