திருப்பூர்: பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

குடியரசு தின விழாவின்போது 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட உள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி சேவை மற்றும் வர்த்தக துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருது மாநில அளவில் வழங்கப்பட உள்ளது. 

இந்த விருதுக்கு பன்முகத்திறமை புரிந்த நபர்களிடம் இருந்து கருத்துரு வரும் ஜூன் மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் உரிய கருத்துருவை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண். 35-ல் ஜூன் மாதம் 6-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி