சிறந்த சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் பிறந்த, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்து மக்களுக்குத் தொண்டாற்றி வரும் சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனத்தினர் விண்ணப்பிக்கலாம். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி