திருப்பூர்: ரூ. 1 கோடி வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில்தொடங்கலாம். 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதனமானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். முன்னாள் படைவீரர்களுக்கு திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் அவரது குழந்தைகள், மற்றும் ராணுவ பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள், திருமணம் ஆகாத மகள் மற்றும் விதவை மகள் பயன்பெறலாம். 

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் ராணுவ பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள், திருமணம் ஆகாத மகள் மற்றும் விதவை மகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. திருமணமாகாத மகன் 25 வயது வரையில் அதற்கு மேல் இருந்தால் முன்னாள் படைவீரரிடம் இணைந்தும் தொழில் தொடங்கலாம். தற்போது வேளாண்மை தொடர்பான அனைத்து தொழில்களுக்கும், பட்டுவளர்ப்பு, கால்நடை பராமரிப்பு தொடர்பான தொழில்கள் தொடங்கவும் வங்கிக்கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை 0421 2971127 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி