திருப்பூர்: பெண்ணை கையை பிடித்து இழுத்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 28-8-2021 அன்று மளிகைக் கடைக்கு நடந்து சென்ற பெண்ணை, பனியன் நிறுவனத் தொழிலாளியான கலீல் ரகுமான் (வயது 40) என்பவர், கையைப் பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததுதொடர்பாக தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கலீல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதுதொடர்பான வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கலீல் ரகுமானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு ரஞ்சித்குமார் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் பானுமதி ஆஜராகினார். சிறப்பாகச் செயல்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி