கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரை விட்டுப் பிரிந்து சந்திரமதி சென்றுள்ளார். அதனால் மனம் உடைந்து காணப்பட்ட செல்வகுமார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.