திருப்பூர் குமாரசாமி காலனி 3-வது வீதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மொபட்டை மர்ம ஆசாமி திருடிச்சென்றான். இதுகுறித்து தெற்கு குற்றப்பி ரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் கோவில்வழியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளியான மணிகண்டன் (வயது 40) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து மொபட்டை பறிமுதல் செய்தனர்.