திருப்பூர்: வட மாநில பெண்கள் வழிபாடு

திருப்பூரில் வசிக்கும் வடமாநில பெண்கள், நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு வட் சாவித்திரி விரதத்தை அனுசரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் இந்த விரதம், கணவரின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வ செழிப்பு மற்றும் குடும்ப நலனுக்காக திருமணமான பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதிகாலையில் புனித நீராடி, சிவப்பு அல்லது மஞ்சள் நிற பாரம்பரிய உடைகளை அணிந்து பெண்கள் இந்த விரதத்தை தொடங்கினர். ஆலமரத்தை வழிபடுவது இதன் முக்கிய அம்சமாகும்.

தொடர்புடைய செய்தி