ஊத்துக்குளி: அதிகமான மாத்திரைகளை தின்ற பெண் பலி

ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் பொன்னபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 40). இவர் கடந்த 12 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. அதற்கான மாத்திரைகளை சாப்பிடும்போது கை நடுக்கம் ஏற்பட்டு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த அவரது கணவர் உடனடியாக அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி