திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், தினமும் ரூ. 2 கோடி என இரண்டு நாட்களுக்கு ரூ. 4 கோடி விற்பனை பாதிக்கப்பட்டது. அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நேற்று முன்தினம் மாலையே மதுக்கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மூடிக் கிடந்த டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கே கடைகள் முன்பு கூடியிருந்த மதுபிரியர்கள், நண்பகல் 12 மணி அளவில் கடை திறக்கப்பட்டதும் போட்டி போட்டு மதுபாட்டில்களை வாங்கினர்.