திருப்பூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த அலிஹு சேன்(வயது 23) என்பதும், அவரிடம் 1 கிலோ 100 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.