திருப்பூர்: ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி..யார் அவர்?: போலீசார் விசாரணை

திருப்பூர்-ஊத்துக்குளி இடையே கூலிபாளையத்தில் தண்டவாளத்தில் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

உடனே ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் அரஞ்சு கலர் டீ-சர்ட் மற்றும் நீல கலர் ஜீன்ஸ் அணிந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி