திருப்பூர்: ரூ.26,000 வழங்க தீர்மானம் நிறைவேற்றம்

திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டிக்கும் வகையிலும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக திருத்தம் செய்வதை திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். 

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை முழுமையாக வெற்றிபெற செய்வது, இதற்கு அனைத்து கட்சிகளுக்கும், வியாபாரிகள் சங்கங்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுப்பது, மாவட்டம் முழுவதும் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது, திருப்பூரில் பிரதான சாலைகளில் பிரச்சாரம் மேற்கொள்ள 200 பேர் கொண்ட பிரசார குழு அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி