ஏதோ உலகத்தில் நடக்காத விஷயத்தை அண்ணாமலை செய்திருப்பதாக நினைத்துக் கொண்டு அதனை பெரிதுபடுத்த தேவையில்லை. அண்ணாமலை செய்து வருவது விளம்பர அரசியல் மற்றும் விமர்சன அரசியலை செய்து வருவதாகத் தெரிவித்தவர், இதுவரை ஆக்கபூர்வமான அரசியலை செய்யவில்லை. அண்ணாமலை ஆக்கபூர்வமான அரசியலை செய்யும் வரை கட்சியை வளர்த்த வாய்ப்பே இல்லை. நேர்த்திக்கடன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கொங்கு மண்டலத்தில் இருக்கின்ற ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும். அப்படி ஒரு வேண்டுதலை வைத்துக் கொண்டு டெல்லிக்கு காவடி தூக்கி ஜவுளி தொழிலை பாதுகாத்தார் என்று சொன்னால் தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு