திருப்பூர் தென்னம்பாளையத்தில் காய்கறி மார்க்கெட் செயல் பட்டு வருகிறது. அதையொட்டி உழவர்சந்தையும் இயங்கு கிறது. இதன் காரணமாக இங்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், இலகு ரக சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனிடையே உழவர்சந்தையின் முன்பு சாலை யில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் ஏதும் செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டது.
ஆனால் வாகனங்கள் செல்வதால் ஏற்பட்ட தொடர் அழுத் தம் காரணமாக உடைப்பு பெரிதாகி தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. இதனால் தார்சாலையும் அதிக அளவில் பெயர்ந்தது.