முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் முதலமைச்சர் விஜய் நாவடக்கத்துடன் பேச வேண்டும். கடந்த ஒரு மாத காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். திருவண்ணாமலை விவகாரத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை அடக்குவதை விடுத்து அதிமுகவைக் குறை சொல்வது தவறு என்று அவர் கூறினார்.