திருப்பூர் மாநகராட்சிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து அவிநாசி வழியாக நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கான தண்ணீர் கொண்டு செல்லும் ராட்சச குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெருமாநல்லூர் சாலை போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்தின் போது, உயர் அழுத்தம் காரணமாக குழாயின் மூடி வெடித்து சிதறியது. இதனால் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.