திருப்பூர் தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளில், அசம்பாவிதங்களைத் தடுக்கவும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீஸ் பஸ்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் வளர்மதி பாலத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் கண்காணிக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.