டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடி விபத்தில் 10 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போலீசார் இரவு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகரில் விடுதிகளில் தங்கியிருப்போர் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் மற்றும் சரக்கு பார்சல்கள் சோதனை செய்யப்பட்டன.