திருப்பூர்: காய்கறிகளின் விலை 'கிடு கிடு' உயர்வு

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு கடந்த சில மாதங்களாக காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்படு கிறது. இதனால் விற்பனை குறைந்து கடந்த மாதம் காய்கறி கள் விலை குறைவாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் பள்ளிகளின் கோடைவிடுமு றையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் காய்கறிகள் விற்பனை குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்பியதை தொடர்ந்து கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகள் விற்பனை அதிகரித் துள்ளது. இதனால் ஒருசில காய்கறிகளின் விலை அதிக ரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை விவரம் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று விற் பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம்: -(மொத்த விற்பனை விலை) 15 கிலோ எடைகள் கொண்ட சுரைக்காய் கட்டு ரூ. 250 முதல் ரூ. 350, புடலங்காய் கட்டு ரூ. 400, பீர்க் கங்காய் கட்டு ரூ. 600, 18 கிலோ எடைகள் கொண்ட வெண் டைக்காய் மூட்டை ரூ. 500, மிளகாய் மூட்டை ரூ. 1, 000, கத்த ரிக்காய் மூட்டை ரூ. 500, தட்டை பயிறு மூட்டை ரூ. 600, அவ ரக்காய் மூட்டை ரூ. 1, 000, 20 கிலோ எடை கொண்ட பாகற் காய் ரூ. 1, 200, 25 கிலோ எடை கொண்ட பீட்ரூட் மூட்டை ரூ. 600, 40 கிலோ எடைகள் கொண்ட முட்டைகோஸ் மூட்டை ரூ. 350 ஆகிய விலைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப் பட்டது. இவ்வாறு அந்த வியாபாரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி