வாஸ்து சரியில்லை: பூட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலகம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ. மு. ச. கூட்டமைப்பு மாநில இணை பொதுச் செயலாளரும், சமூக ஆர்வலருமாகிய ஈ. பி. அ. சரவணன் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: -

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் தெற்கு நோக்கி இருப்பதால் வாஸ்து சரியில்லை எனக்கூறி கதவை அடைத்து விட்டனர். இதனால் பின்புறம் உள்ள சுவரை இடித்து வாயிற்கதவு வைத்து அதன் வழியாக அனைவரும் வருகிறார்கள். எனவே பூட்டி கிடக்கின்ற தெற்கு தாலுகா அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் கதவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி