திருப்பூர்: புதிதாக இரண்டு அடக்கஸ்தலம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை

தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோஅருண் தலைமையில் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது ரபி உத்தரவுப் படி, வடக்கு மாவட்ட செயலாளர் முகமது ஹசன், பொருளாளர் ஜனாப் அஜ்மத்துல்லா, துணை தலைவர் முபாரக் மற்றும் சித்திக் பாஷா ஆகியோர் சிறுபான்மையினர் ஆணைய தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில் திருப்பூர் வடக்கு பகுதியில் புதிதாக இரண்டு அடக்கஸ்தலம் அமைக்க இடம் வேண்டும். எஸ். ஏ. பி. கபர்ஸ்தானுக்கு மண் மாற்றி, மின்விளக்கு, சிமெண்ட் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். வடக்கு பகுதி பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்படும் சொத்துவரி, குடிநீர் வரி போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்தி