திருப்பூர் வந்தார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.

திருமண விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வந்தே பாரத் ரயில் மூலம் திருப்பூர் வந்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரான எல். முருகன், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்று, நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று காலை கேரளாவின் குருவாயூர் பகுதியில் கோயில் தரிசனம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பின்னர் வந்தே பாரத் ரயில் மூலம் திருப்பூர் வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி