ஜல்லி கற்கள் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை புவியியல் அதிகாரி வெங்கடேசன் பறிமுதல் செய்தார். சென்னி மலையில் இருந்து திருப்பூர் மாவட்டம் மங்கலம் செல்வதற்காக வந்த லாரிகள், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி அருகில் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டபோது, அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி