அப்போது தங்கவேலின் மனைவி மீனாட்சிக்கும், தனபாக்கியத்திற்கும் இடையே தொட்டியில் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கவேல் மற்றும் மீனாட்சி ஆகியோர் சேர்ந்து தனபாக்கியத்தைத் தாக்கிக் கீழே தள்ளினர். இதில் தனபாக்கியம் மயக்கமடைந்தார். இதனைப் பார்த்த ஆகாஷ் ஆத்திரம் அடைந்து தங்கவேலைத் தாக்கினார். அப்போது தங்கவேல் ஆகாஷைக் கத்தியால் தாக்கினார்.
இதில் காயமடைந்த ஆகாஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மீனாட்சி (37) தங்கவேல் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் ஆகாஷ் மற்றும் அவருடைய தாய் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.