திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சோதனை நடத்திய போது கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ராபின் உசைன் (வயது 32) மற்றும் இஸ்ஹாக் அலி (30) ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தொடர்புடைய செய்தி