திருப்பூர் கொங்கு ரோடு ரங்கநாதபுரம் 5-வது வீதியை சேர்ந்தவர் சேகர்(வயது 40). இவர் தனது வீட்டை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (வயது 24) என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு விட்டிருந்தார். இந்த நிலையில் அலெக்சுக்கும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய வீட்டின் உரிமையாளர் சேகர் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஆதரவாக பேசுவதாக எண்ணி அலெக்ஸ் மற்றும் அவரது நண்பர் சக்திவேல்(26) இருவரும் குடிபோதையில் அரிவாளுடன் சென்று கதவு, டி.வி., ஜன்னல்களை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சேகர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அலெக்ஸ் மற்றும் சக்திவேலை கைது செய்தனர்.